புது டெல்லி – இந்தியாவிற்கு முன்னணி பன்னாட்டு செல்பேசி நிறுவனங்கள் வரவு அதிகரித்துள்ளதால், இங்கு செல்பேசி உற்பத்தி 100 மில்லியனைத் தாண்டி உள்ளதாகத் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்,
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியாவிற்கு பன்னாட்டு மின்னணு நிறுவனங்கள் மூலம் 1.14 இலட்சம் கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது. 15 முக்கிய நிறுவனங்களின் செல்பேசி உற்பத்தி மையம் தொடங்கப்பட்டுள்ளது. 2014-ல் 68 மில்லியனாக இருந்த செல்பேசி உற்பத்தி, ஒரே வருடத்தில் 100 மில்லியனைத் தாண்டி உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
2015 டிசம்பர் மாதத்தின் படி, இந்தியாவில் செல்பேசி விற்பனையும் 100 மில்லியனைத் தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.