Home Featured நாடு துணையமைச்சர், செனட்டர் பதவிகளை இராஜினாமா செய்தார் அகமட் பாஷா!

துணையமைச்சர், செனட்டர் பதவிகளை இராஜினாமா செய்தார் அகமட் பாஷா!

773
0
SHARE
Ad

Ahmad-Bashahகோலாலம்பூர் – கெடா மந்திரி பெசாராக நியமனம் செய்யப்பட்டுள்ள கெடா அம்னோ துணைத்தலைவர் அகமட் பாஷா, தான் வகித்து வந்த துணையமைச்சர், செனட்டர் பதவிக்களை இன்று ராஜினாமா செய்தார்.

உள்நாட்டு வாணிப, கூட்டுறவு , பயனீட்டாளர் துறையின் துணை அமைச்சராகவும், நாடாளுமன்ற செனட்டராகவும் பதவி வகித்து வந்த அகமட் பாஷா, நாளை கெடா மந்திரி பெசாராகப் பதவி ஏற்பதை முன்னிட்டு, இன்று இந்த இரண்டு பதவிகளையும் ராஜினாமா செய்துள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கும் அனுப்பிவிட்டதாக பாங்குனான் துங்குவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.