கோலாலம்பூர் – வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வரியை (லெவி) அரசாங்கம் இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளதால், வீட்டின் விலையை அதிகரிக்க கட்டுமான நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.
வீடு வாங்குபவர்களிடம் கூடுதலாக பணம் வசூலிக்க வேண்டிய நிலைக்கு, கட்டுமான நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளதாக மலேசிய கட்டுமான நிறுவனங்களின் சங்கம் (MMBA) தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வரியை ஆண்டுக்கு 2,500 ரிங்கிட்டாக அரசாங்கம் உயர்த்திவிட்டது. இதனால் இந்த மாதத்தில் இருந்து தொழிலாளர்களின் செலவு 10 சதவிகிதம் அதிகரிக்கிறது என்பதால் வீட்டின் மொத்த விலையில் இரண்டு மடங்கு அதிகமாகிறது என அச்சங்கத்தின் துணைத்தலைவர் ஃபூ செக் லீ தெரிவித்துள்ளார்.