Home Featured உலகம் உடலுறவு மூலமாகவும் ஜிகா வைரஸ் பரவுகிறது – அதிர்ச்சித் தகவல்!

உடலுறவு மூலமாகவும் ஜிகா வைரஸ் பரவுகிறது – அதிர்ச்சித் தகவல்!

610
0
SHARE
Ad

dengue_7டல்லாஸ் – அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகரில் ஆடவர் ஒருவருக்கு உடலுறவு மூலமாக ஜிகா வைரஸ் பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

ஜிகா வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்கு அந்நபர் பயணம் செய்யவில்லை என்றாலும் கூட, வெனிசுலாவிற்கு பயணம் செய்து விட்டுத் திரும்பிய தனது மனைவியுடன் அவர் உடலுறவு கொண்டதன் மூலம் அவருக்கும் ஜிகா வைரஸ் தொற்றியுள்ளது.

ஏடிஇஎஸ் கொசுக்கள் கடிப்பதால் ஜிகா வைரஸ் பரவுகிறது என்பதோடு, கருவுற்ற பெண்களுக்குப் பரவும் அக்கிருமி வயிற்றில் இருக்கும் சிசுவின் மூளை வளர்ச்சியை பாதிப்படையச் செய்கின்றது.

#TamilSchoolmychoice

உலகமெங்கும் சுமார் 13-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜிகா வைரஸ் பரவி வருவதால், உலக சுகாதார நிறுவனம் அனைத்துலக அவசர நிலைப் பிரகடனத்தை அறிவித்துள்ளது.