படாங் – இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நேற்று முன்தினம் இரவு கடலுக்கடியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான நிலநடுக்கத்தால் பூமி குலுங்கியதைத் தொடர்ந்து பீதியில் உறைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி மலையடிவாரத்தில் இரவுப் பொழுதை கழித்தனர்.
பூகம்பத்தால் உயிரிழப்பு அல்லது பொருட்சேதம் எதுவும் இல்லை என்றாலும், தொடர்ந்து நில அதிர்ச்சி ஏற்பட்டு வருவதால், நிலைமையை கண்காணிக்க ராணுவத்தினர் உள்பட தேடுதல் மற்றும் மீட்புப்படை குழுவினர், சுமத்ராவுக்கு நேற்று புறப்பட்டுச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.