அறிவியல், தொழில் நுட்ப பிரிவில், காட்டலாங்கோ லியோனுக்கும், அவரது குழுவினருக்கும் கூட்டாக ஆஸ்கார் விருது கிடைத்திருக்கிறது. விருது விழாவில் அவர் ‘அனைவருக்கும் நன்றி’ என தமிழில் கூறினார்.
ஆஸ்கார் விருது பெற்றிருப்பது குறித்து காட்டலாங்கோ லியோன் கூறும்போது, “அறிவியல் தொழில்நுட்பத்துக்கான ஆஸ்கார் விருது, குறிப்பிட்ட ஒரு படத்துக்கு உரித்தானது அல்ல.
எல்லா படங்களுக்கும், ஸ்டூடியோக்களுக்கும் இந்த தொழில் நுட்பம் பயன்படும்” என்றார். மேலும், “எங்கள் பணிக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் இந்த விருது. நானும் எனது சகாக்கள் ராபர்ட் ராய், சாம் ரிச்சர்ட்ஸ் மற்றும் அனைவரும் இதில் பங்களிப்பு செய்திருப்பது பெருமிதம் தருகிறது” என்றார்.