சென்னை – திமுகவில் ஸ்டாலின் உள்ள வரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூட்டணிக்கு வரமாட்டார் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி கூறியுள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் மாநாடு சென்னை ஒ.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், வரும் சட்டப்பேரவை தேர்தலை தேமுதிக தனியாக சந்திக்கும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மு.க. அழகிரி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்திருப்பது திமுகவிற்கு ஏமாற்றமே என அவர் கூறியுள்ளார். மேலும் திமுகவில் ஸ்டாலின் இருக்கும் வரையில் விஜயகாந்த் கூட்டணிக்கு வரமாட்டார் எனவும் அழகிரி கூறியுள்ளார்.
அதிமுக சார்பில் கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி அரசியலில் திருப்பமுனையை உருவாக்கும் சக்தியாக தேமுதிக இல்லை, கூட்டணி குறித்த அறிவிப்பு குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என கூறியள்ளார்.
தேமுதிகவின் முடிவு எதிர்பார்த்த ஒன்று தான் என பாஜகவி்ன் தேசிய செயலாளர் எச். ராஜா. தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பாஜகவின் வளர்ச்சியை பாதிக்காது எனவும் கூறியள்ளார்.