Home Featured உலகம் அமெரிக்க அதிபர் தேர்தல்: 5 மாகாணங்களில் ஹிலாரி – டிரம்ப் முன்னிலை!

அமெரிக்க அதிபர் தேர்தல்: 5 மாகாணங்களில் ஹிலாரி – டிரம்ப் முன்னிலை!

626
0
SHARE
Ad

Trump-Hillary-Clintonவாஷிங்டன் – அமெரிக்க அதிபர் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக 5 மாகாணங்களில் நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சியில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சியில் டொனால்டு டிரம்பும் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இத்தேர்தலில் ஜனநாயகம் மற்றும் குடியரசு கட்சிகளின் சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் தேர்தல் அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் இரு கட்சிகளின் சார்பில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புளோரிடா, வடக்கு கரோலினா, ஓகியோ, மிசோரி, இலினாஸ், ஆகிய மாகாணங்களில் வேட்பாளர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

#TamilSchoolmychoice

இதில் குடியரசு கட்சியை சேர்ந்த ஹலாரி கிளிண்டன் புளோரிடா, ஓகியோ, இலினாஸ், மற்றும் வடக்கு கரோலினா ஆகிய 4 மாகாணங்களிலும் அமோக வெற்றி பெற்றார். மேலும் மிசோரி மாகாணத்தில் முன்னிலையில் உள்ளார்.

இவரை எதிரத்து போட்டியிட்ட பெர்னி சாண்டர்ஸ் படுதோல்வி அடைந்தார். இதே போன்று குடியரசு கட்சி புளோரிடா, ஓகியோ, வடக்கு கரோலினா ஆகிய மாகாணங்களில் அமோக வெற்றி பெற்றார்.

ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் அதிக இடங்களில் வெற்றி பெற்று இறுதி வேட்பாளராகும் தகுதியை பெற்றுள்ளார். குடியரசு கட்சியில் தற்போதைய நிலவரப்படி டொனால்டு டிரம்ப் முன்னிலையில் உள்ளார்.