Home Featured கலையுலகம் விலங்குகளுக்கு ஆதரவாகப் பேசும் திரிஷா கவுரவ கொலைகளுக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை?

விலங்குகளுக்கு ஆதரவாகப் பேசும் திரிஷா கவுரவ கொலைகளுக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை?

552
0
SHARE
Ad

trisha-actres-12600சென்னை – ‘‘விலங்குகளுக்கு ஆதரவாகப் பேசும் நடிகை திரிஷா கவுரவ கொலைகளுக்கு எதிராக ஏன் குரல் கொடுப்பது இல்லை?’’ என்று டுவிட்டரில் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

நடிகை திரிஷா பிராணிகள் நல பாதுகாப்புக்கு குரல் கொடுத்து வருகிறார். வெறிபிடித்த தெருநாய்களை கொன்றுவிட மாநகராட்சி முடிவு எடுத்தபோது கண்டித்தார். அவற்றுக்கு ஊசி போட்டு இன பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம் என்று யோசனை தெரிவித்தார்.

ஒரு தெரு நாயை தத்து எடுத்து வீட்டில் வளர்த்தும் வருகிறார். விலங்குகள் அமைப்பான பீட்டாவின் விளம்பர தூதுவராகவும் இருக்கிறார். ஜல்லிக்கட்டை இந்த அமைப்பு எதிர்த்தபோது, திரிஷா தமிழ் அமைப்புகளின் கண்டனத்துக்கு உள்ளானார்.

#TamilSchoolmychoice

அந்த அமைப்பில் இருந்து அவர் விலக வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டன. இந்த நிலையில், தற்போது குதிரையொன்றின் காலை உடைப்பது போன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள காணொளியைப் பார்த்து அதிர்ச்சியாகி திரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்த காணொளி உத்தரகாண்ட் மாநிலத்தில் எடுக்கப்பட்டது. அங்குள்ள ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் முசோரி கணேஷ் ஜோஷி தலைமையில் டேராடூனில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த குதிரைகளில் போலீசார் வந்து இருந்தனர்.

அப்போது போலீஸ்காரர் அமர்ந்து இருந்த ஒரு குதிரையின் காலை முசோரி கணேஷ் ஜோஷி சட்டமன்ற உறுப்பினர் கட்டையால் மாறி மாறி அடிப்பது போன்றும் இதனால் அந்த குதிரை கால்கள் முறிந்து கீழே விழுவது போன்றும் அந்த காணொளி இருந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த காணொளி காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதை பார்த்த திரிஷாவும் தனது டுவிட்டரில் வெளியிட்டு அதோடு கோபமாக தனது கருத்தையும் பதிவு செய்துள்ளார்.

அதில், ‘‘ஆம் உங்களை நரகத்தில் போட்டு எரிக்க வேண்டும். இதனை எனது பிரார்த்தனையாக வைக்கிறேன். இந்தச் சம்பவம் அசிங்கமான ஒன்று’’ என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

அவரை நரகத்தில் எரிக்க வேண்டும் என்று திரிஷா கூறியதற்காக அவரது டுவிட்டர் பக்கத்தில் உள்ளது. இதற்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்து கருத்துக்கள் பதிவு செய்துள்ளனர். ‘‘குதிரை காலில் அடித்ததை திரிஷா எதிர்க்கிறார்.ஆனால் ஜாதி வெறியால் ஒரு இளைஞர் வெட்டப்படும் காணொளியை மட்டும் பார்ப்பார். உங்களுக்கு நல்ல மனித நேயம் திரிஷா’’ என்று குறிப்பிட்டுள்ளார். ‘‘இதுபோல் கருத்து பதிவிடுவதால் திரிஷாவுக்கு விலங்குகள் அமைப்பில் இருந்து வருமானம் வருகிறது’’ என்று கூறி உள்ளார்.

மற்றொரு ரசிகர் ‘‘விலங்குகளுக்காக குரல் கொடுக்கும் திரிஷாவுக்கு கவுரவ கொலைகளுக்கு எதிராக குரல் கொடுக்க தைரியம் இல்லை. இது கோழைத்தனம் ஆகும்’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.