Home Featured நாடு பெட்ரோனாஸ் ஆலோசகராக அப்துல்லா படாவி பதவி ஏற்க அதிக வாய்ப்பு!

பெட்ரோனாஸ் ஆலோசகராக அப்துல்லா படாவி பதவி ஏற்க அதிக வாய்ப்பு!

671
0
SHARE
Ad

abdullah-ahmad-badawi130806கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்டிடமிருந்து பறிக்கப்பட்ட பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவிக்கு, மலேசிய அரசியல் வட்டாரங்களில் தற்போது இரண்டு முக்கியத் தலைவர்களின் பெயர்கள் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றன.

அந்தப் பதவிக்கு முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அகமட் படாவியோ அல்லது அரச குடும்பத்தைச் சேர்ந்த அரசியல் தலைவரான துங்கு ரசாலி ஹம்சாவோ தான் சரியாக இருப்பார்கள் என புத்ராஜெயாவிலும் பேச்சுகள் நிலவி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2003-ம் ஆண்டு பிரதமர் பதவியிலிருந்து விலகியது முதல் பெட்ரோனாஸ் ஆலோசகராகப் பதவி வந்தார் மகாதீர்.

#TamilSchoolmychoice

Dr Mahathirஆனால், அண்மையில் நஜிப்புக்கு எதிராக மக்கள் பிரகடனத்தில் கையெழுத்திட்ட காரணத்தால் கடந்த வாரம் அவர் பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவியிலிருந்து அரசாங்கத்தால் நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், இதற்கு முன்பு முன்னாள் பிரதமர்களான துன் ஹூசைன் ஆனும், டாக்டர் மகாதீரும் இந்தப் பதவியில் இருந்திருப்பதால், தற்போது 76 வயதாகும் முன்னாள் பிரதமரான அப்துல்லா படாவியிடமே அப்பதவி ஒப்படைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகின்றது.

ஜோகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ ஸ்ரீ ஷாஹிர் சமட் கூட, “ஆலோசகர் பதவி ஓய்வு பெற்ற முன்னாள் பிரதமர்களுக்கே பாரம்பரியமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், அதை ஏன் அரசியலாக்குகிறீர்கள். உயர்ந்த பதவி வகித்தவர்களுக்கு வழங்கப்படும் ஒரு கௌரவப் பதவியாகவே அது இருந்துவிட்டுப் போகட்டுமே” என்று கருத்துத் தெரிவித்துள்ளதாக ஸ்டார் இணையதளம் கூறுகின்றது.

பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவி என்பது மிகவும் உயர்ந்த பதவி தான். காரணம் பெட்ரோனாஸ் இரட்டை கோபுரத்தின் 86-வது மாடியில் தான் அலுவலகம் அமைந்துள்ளது.

Tengku-Razaleighஇந்தப் பதவிக்கு, அடுத்த மாதம் 79 வயதை எட்டவிருக்கும் மூத்த அரசியல் தலைவர் துங்கு ரசாலியின் பெயர் முன்மொழியப்படுவதற்குக் காரணம் என்னவென்றால், அவர் தனது 37-வயதிலேயே பெட்ரோனாசின் முதல் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாகப் பதவி வகித்து அதற்கு அடித்தளம் அமைத்தவர்.

தற்போது குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து வரும் துங்கு ரசாலி, அடுத்த முறை தான் போட்டியிடப் போவதில்லை என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.

எனவே, தற்போதைய நிலவரப்படி, பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவி அப்துல்லா படாவிக்கே செல்ல பெரும் வாய்ப்பு உள்ளதாகத் தெரியவந்துள்ளது.