Home Featured நாடு சிங்கப்பூர் அதிகாரிகள் என்னை தீவிரவாதி போல் நடத்தினர் – ரிதுவான் டி குற்றச்சாட்டு!

சிங்கப்பூர் அதிகாரிகள் என்னை தீவிரவாதி போல் நடத்தினர் – ரிதுவான் டி குற்றச்சாட்டு!

668
0
SHARE
Ad

Ridhuan_Teeகோலாலம்பூர் – தண்ணீர் பரிசோதனை ஒன்றிற்காக சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற தன்னை சிங்கப்பூர் குடிநுழைவு அதிகாரிகள் தீவிரவாதியைப் போல் நடத்தியதாக பல்கலைக்கழகப் பேராசிரியரான ரிதுவான் டி அப்துல்லா தெரிவித்துள்ளார்.

சுமார் இரண்டு மணி நேரங்கள் தன்னிடம் விசாரணை நடத்தியதோடு, தன்னை புகைப்படமும், பலமுறை கைரேகை எடுத்ததாகவும் ரிதுவான் டி குற்றம் சாட்டியுள்ளார்.

தன்னை ஒரு குற்றவாளியைப் போல் சிங்கப்பூர் அதிகாரிகள் நடத்திவிட்டு, இறுதியாக தான் சிங்கப்பூருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் கடிதம் ஒன்றையும் தன்னிடம் அளித்ததாக மலாய் பத்திரிகை ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

 

 

Comments