ஹவானா – அமெரிக்க அதிபர் ஒபாமா 3 நாள் பயணமாக கியூபா சென்றுள்ளார். தனது மனைவி மற்றும் இருமகள்களுடன் கியூபா சென்ற ஒபாமாவிற்கு தலைநகர் ஹவானாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவை, ஒபாமா சந்தித்துள்ளார். ஹவானா மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது இருநாட்டு நல்லுறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
கியூபாவுக்கும் அமெரிக்காவுக்கும் பல ஆண்டுகளாக நீடித்து வந்த பனிப்போர் முடிவுக்கு வந்த நிலையில், அதிபர் ஒபாமாவின் இந்த சுற்றுப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 88 ஆண்டுகளில் அமெரிக்க அதிபர் ஒருவர் கியூபா செல்வது இதுதான் முதல் முறையாகும்.