கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு வெளியே இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஹபாரிசாம் தான் நியமனம் செய்யப்பட்டுள்ள தகவலை வெளியிட்டார்.
“நஜிப் சார்பில் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள நான், (மகாதீரின் வழக்கறிஞர்) ஹனிப் காட்ரி அப்துல்லாவிற்கு இன்று கடிதம் ஒன்றை எழுதுகின்றேன். அதில் மகாதீர் மற்றும் இன்னும் இரண்டு பேர் பதிவு செய்த வழக்கு மனுவை அனுப்பி வைக்கும்படி கேட்கவுள்ளேன்” என்று ஹபாரிசாம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கப் பதவி வகித்த காலத்தில் முறையற்ற வகையில் நடந்து கொண்டதோடு, அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்று கூறி பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குக்கு எதிராக, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் மொகமட்டோடு மேலும் இருவர் சேர்ந்து கடந்த வாரம் வழக்குப் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.