இது குறித்து எம்சிஎம்சி நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், புத்ராஜெயா காவல்துறைத் தலைமையகத்தைச் சேர்ந்த வர்த்தக குற்ற விசாரணைப் பிரிவுடன், எம்சிஎம்சி இணைந்து நடத்திய நடவடிக்கையில், 26 வயது பொறியியலாளர் சிக்கினார் என்று தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 25-ம் தேதி செய்தி இணையதளம் ஒன்று வெளியிட்ட கட்டுரை தொடர்பில், அந்த இணையதளத்தின் பேஸ்புக் பக்க கருத்துப் பகுதியில் அந்த நபர் நஜிப் குறித்த அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கடந்த மார்ச் 28-ம் தேதி, சைபர்ஜெயாவில் அவரை விசாரணை செய்த எம்சிஎம்சி அவரிடமிருந்து வாக்குமூலம் பெற்றுள்ளது.
ஆசஸ் வகை திறன்பேசியைப் பயன்படுத்திய அந்த நபரின் சிம் கார்டு முடக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இவரைப் போன்றே அவதூறான கருத்துக்கள் தெரிவித்த இன்னும் சிலரையும் எம்சிஎம்சி விசாரணை செய்யவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.