Home Featured நாடு நஜிப் குறித்து பேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்த பொறியியலாளர் கைது!

நஜிப் குறித்து பேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்த பொறியியலாளர் கைது!

623
0
SHARE
Ad

facebook-arrest24-600கோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை அவமானப்படுத்துவது போல் அவதூறான கருத்துக்களை செய்தி இணையதளம் ஒன்றின் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்த 26 வயது பொறியியலாளரை மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) நேற்று கைது செய்துள்ளது.

இது குறித்து எம்சிஎம்சி நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், புத்ராஜெயா காவல்துறைத் தலைமையகத்தைச் சேர்ந்த வர்த்தக குற்ற விசாரணைப் பிரிவுடன், எம்சிஎம்சி இணைந்து நடத்திய நடவடிக்கையில், 26 வயது பொறியியலாளர் சிக்கினார் என்று தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 25-ம் தேதி செய்தி இணையதளம் ஒன்று வெளியிட்ட கட்டுரை தொடர்பில், அந்த இணையதளத்தின் பேஸ்புக் பக்க கருத்துப் பகுதியில் அந்த நபர் நஜிப் குறித்த அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதனையடுத்து, கடந்த மார்ச் 28-ம் தேதி, சைபர்ஜெயாவில் அவரை விசாரணை செய்த எம்சிஎம்சி அவரிடமிருந்து வாக்குமூலம் பெற்றுள்ளது.

ஆசஸ் வகை திறன்பேசியைப் பயன்படுத்திய அந்த நபரின் சிம் கார்டு முடக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இவரைப் போன்றே அவதூறான கருத்துக்கள் தெரிவித்த இன்னும் சிலரையும் எம்சிஎம்சி விசாரணை செய்யவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.