Home Featured தமிழ் நாடு தமாகா-வுக்கு 15 தொகுதிகளா? ஜெயலலிதாவை சந்திக்கின்றார் ஜி.கே.வாசன்!

தமாகா-வுக்கு 15 தொகுதிகளா? ஜெயலலிதாவை சந்திக்கின்றார் ஜி.கே.வாசன்!

510
0
SHARE
Ad

jaya-vasanசென்னை – அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 15 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதனைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவை தமாகா தலைவர் ஜிகே வாசன் சந்தித்து பேச உள்ளார்.

சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா 25 தொகுதிகளைக் கேட்டது. ஆனால் அதிமுகவோ 8 தொகுதிகளைத் தருவதாக கூறி வந்தது. இதனால் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியில் தமாகா இணையலாம் எனக் கூறப்பட்டு வந்தது.

மேலும் திமுகவும் தமாகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியாகின. இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் தமாகா இடம்பெறாது என அறிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்த நிலையில் தமாகாவுக்கு 15 தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்துள்ளதாக அதிமுக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதாவை ஜிகே வாசன் நேரில் சந்தித்து கூட்டணியை உறுதி செய்ய உள்ளதாக தமாகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comments