Home Featured தமிழ் நாடு காங்கிரசுக்கு 41 தொகுதிகள் – திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

காங்கிரசுக்கு 41 தொகுதிகள் – திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

603
0
SHARE
Ad

karunanidhi-gulam5454சென்னை – தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் குறித்து திமுக தலைவர் கருணாநிதியை மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் தற்போது சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் கோபாலபுரம் சென்ற  குலாம்நபி ஆசாத் கருணாநிதியை சந்தித்தார். இச்சந்திப்பின் போது திமுக பொருளாளர் ஸ்டாலின், கனிமொழி, தமிழக காங்கிரஸ் குழுத் தலைவர் இளங்கோவன் உடனிருந்தனர்.

திமுக கூட்டணியில் கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 63 தொகுதிகளை காங்கிரஸ் கேட்டது. ஆனால் திமுகவோ 25 முதல் 30 தொகுதிகள் வரைதான் தர முடியும் என திட்டவட்டமாக கூறியது. இதை காங்கிரஸ் ஏற்க மறுத்து வந்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் காங்கிரஸுக்கு 41 தொகுதிகளை ஒதுக்க திமுக முடிவு செய்திருக்கிறது.

இதனை காங்கிரஸ் கட்சியும் ஏற்று தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கையெழுத்திடுட்டுள்ளார்.

இந்தத் தகவலை திமுக தலைவர் கருணாநிதியும் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.