Home Featured உலகம் சவுதி மன்னருடன் மோடி: ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

சவுதி மன்னருடன் மோடி: ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

949
0
SHARE
Ad

modi-saudi34ரியாத் – சவுதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ் அல் சாத்தை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகள் இடையேயும் 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பெல்ஜியம், அமெரிக்கா ஆகிய நாடுகளில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு பிரதமர் மோடி சவுதி அரேபியாவில் 2 நாள் பயணம் மேற்கொண்டார்.

இப்பயணத்தின் நிறைவு நாளான நேற்று அவர் தலைநகர் ரியாத்தில் சவுதி அரேபிய தொழில் அதிபர்கள் மற்றும் இந்திய வர்த்தக தலைவர்கள் கூட்டத்தில் பேசினார். இந்நிகழ்ச்சிகளுக்கு பின்னர், சவுதி சுகாதாரத்துறை அமைச்சர் அல்-பாலிக், வெளியுறவுத்துறை அமைச்சர்அடெல் அல்-ஜூபைர் ஆகியோரையும் சந்தித்தார்.

இதைத் தொடர்ந்து சவுதி மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ் அல் சாத்தை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். கேரளாவில் கி.பி.629-ஆம் ஆண்டில் அரேபிய வணிகர்களால் கட்டப்பட்ட சேரமான் ஜூமா மசூதியின் தங்க முலாம் பூசிய மாதிரி வடிவத்தை மன்னருக்கு பிரதமர் மோடி நினைவுப் பரிசாக வழங்கினார். சவுதியின் உயர்ந்த விருதை மோடிக்கு மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ் அல் சாத் வழங்கினார்.

#TamilSchoolmychoice

அப்போது இருநாடுகள் இடையே ராணுவ உறவை மேம்படுத்துவது, வர்த்தகம், முதலீடு, தீவிரவாத எதிர்ப்பு ஆகியவற்றில் ஒத்துழைத்து செயல்படுவது பற்றி அவர்கள் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து இருநாடுகள் இடையேயும் புலனாய்வு தகவல்களை பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.