Home Featured கலையுலகம் ‘தெறி’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்!

‘தெறி’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்!

997
0
SHARE
Ad

theri-songs-downloadசென்னை – விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தெறி’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்திருக்கிறார்கள். மேலும் இயக்குனர் மகேந்திரன், மீனா மகள் நைனிகா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

அட்லி இயக்கியுள்ள இப்படத்தை ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது இவருக்கு 50-ஆவது படமாகும். இவர் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து இப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது.

படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கலைப்புலி தாணு தயாரித்துள்ள இப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி உலகெங்கும் வெளியாகவுள்ளது. மேலும் இப்படம் தெலுங்கில் ‘போலீசோடு’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது.