Home கலை உலகம் இயக்குநர் மகேந்திரன் நலமுடன் உள்ளார்!

இயக்குநர் மகேந்திரன் நலமுடன் உள்ளார்!

919
0
SHARE
Ad

cbmp16mahendran_jp_1685383gசென்னை – புதுக்கோட்டையில் நடைபெற்று வந்த ‘புகழேந்தி என்னும் நான்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடித்து வந்த பழம்பெரும் இயக்குநர் மகேந்திரன், திடீரென மூச்சுத் திணறல் காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை மயங்கி விழுந்தார்.

இந்நிலையில், அங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவர், தற்போது நலமுடன் இருப்பதாக தமிழக ஊடகங்கள் கூறுகின்றன.

மேலும், மகேந்திரனின் மகனான இயக்குநர் ஜான் மகேந்திரன், தனது தந்தையைச் சந்தித்துப் பேசியதாகவும், அவர் நலமுடன் உள்ளார் என்றும் தனது டுவிட்டரில் உறுதிப்படுத்தியிருக்கிறார்.