Home நாடு தனி அரசாங்கத்தை அமைக்க பாஸ் திட்டமிடுகிறது: ஹாடி அவாங்

தனி அரசாங்கத்தை அமைக்க பாஸ் திட்டமிடுகிறது: ஹாடி அவாங்

697
0
SHARE
Ad

Hadi Awang PAS Presidentகோலாலம்பூர் -14-வது பொதுத்தேர்தலில், பாஸ் கட்சி 130-க்கும் அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு, வெற்றியடையும் பட்சத்தில் தனி அரசாங்கத்தை அமைக்கும் என்ற அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தெரிவித்திருக்கிறார்.

222 நாடாளுமன்றத் தொகுதிகளில், 130-க்கும் அதிகமான தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றியடையும் அல்லது குறைந்தது 112 தொகுதிகளில் வெற்றியடைந்து குறைந்த பெரும்பான்மையை அடையும் என்றும் ஹாடி குறிப்பிட்டிருக்கிறார்.

“பாஸ், தனி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் அல்லது அரசாங்கத்தை அமைப்பதில் பங்களிப்பு செய்ய வேண்டும். ஒரு பலவீனமான எதிர்கட்சியாக இனி இருக்காது” என்று நேற்று ஞாயிற்றுக்கிழமை சிலாங்கூர் பாஸ் தேர்தல் பணிகளின் துவக்க விழாவில் ஹாடி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice