பினாங்கு – தாமான் சாய் லெங்கில் அமைந்துள்ள பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமியின் சேவை மையம் ஒன்றில் இன்று காலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
இஸ்லாம் பண்டிதர் டாக்டர் ஜாகிர் நாயக்கின் சொற்பொழிவு சர்ச்சையில், நேற்று தனது பேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்த பேராசிரியர் பி.இராமசாமி, ஜாகிரை ‘சாத்தான்’ என்று வர்ணித்தார். பின்னர், அக்கருத்தையும் அவரே நீக்கிவிட்டிருந்தார்.
என்றாலும், இன்று அவரது சேவை மையத்தின் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது கருத்திற்கு இராமசாமி தற்போது வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் மலேசியாகினி உள்ளிட்ட ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனிடையே, பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் பெயரிலான போலி டுவிட்டர் பக்கத்தில், இந்திய நாட்டைச் சேர்ந்தவரான ஜாகிர் நாயக்கிற்கு பினாங்கில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் குறித்து முதல்வர் அலுவலகம் சார்பில் காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.