சென்னை – திமுக தலைவர் கருணாநிதியை அவதூறக பேசியது தொடர்பாக, வைகோ மீது தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில், எழும்பூர் காவல் துறையினர் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதன்படி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது, அவதூறாக பேசியது மற்றும் ஜாதி மோதலை தூண்டும் வகையில் பேசியதாக இரு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. எழும்பூர் சட்டமன்ற தேர்தல் நடத்தும் அதிகாரி சங்கீதா அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதி அமளில் உள்ள போது, கடந்த 6 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த வைகோ கருணாநிதியை இழிவாக பேசியதால் அவர் மீது உரிய சட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய தேர்தல் நடத்தும் அதிகாரி சங்கீதா வலியுறுத்தினார். அதன் அடிப்படையில், வைகோ மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.