சென்னை – இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் பாரிவேந்தர் வெளியிட்டார். நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
இதில், அக்கட்சிக்கு 45 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில், அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் பாரிவேந்தர் இன்று வெளியிட்டார்.
வேட்பாளர்கள் விவரம்:
திட்டக்குடி – கலையரசன்
நெய்வேலி – சந்திரன்
விருத்தாசலம் – ராஜேந்திரன்
பாலக்கோடு – நஞ்சப்பன்
நத்தம் – சந்தான கிருஷ்ணன்
வேடசந்தூர் – சிவரஞ்சனி
திருவிக நகர் – சந்திரசேகர்,
முதராந்தகம் (தனி) – விநாயகமூர்த்தி,
அரவக்குறிச்சி – பாபு
மதுரை வடக்கு – பா.ஆனந்த்
பூம்புகார் – செல்வமுத்துகுமரன்
சேந்தமங்கலம் – மணிகண்டன்
குன்னம் – அசோகன்
ஆலங்குடி – சரவணன்
அறந்தாங்கி – ஜெமினி கணசேன்
ஆத்தூர் – செல்லதுத்துரை
பெரம்பலூர் – கோவிந்தராஜ்
எடப்பாடி – வெங்கடேசன்
திருப்பத்தூர் – ராஜசேகரன்
திருவையாறு – சேவியர்ராஜ்
கலசபாக்கம் – முருகதாஸ்
லால்குடி – செல்வகுமார்
காட்பாடி – முருகன்
குடியாத்தம் – கணேசன்
மயிலம் – ரமாதேவி
ரிஷிவந்தியம் – செந்தில்குமார், உள்பட 42 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாரிவேந்தர் வெளியிட்டுள்ளார். மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார் என்றும், இந்த தேர்தலில் பாரிவேந்தர் போட்டியிடவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.