Home Featured தொழில் நுட்பம் இனி பேஸ்புக் மூலம் பணப் பரிமாற்றம் செய்ய புதிய வசதி அறிமுகம்!

இனி பேஸ்புக் மூலம் பணப் பரிமாற்றம் செய்ய புதிய வசதி அறிமுகம்!

583
0
SHARE
Ad

Make-payments Facebook-Messengerநியூயார்க் – பேஸ்புக் வலைத்தளம் புதிய வசதி ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. பேஸ்புக் வலைத்தளம் தனது மெசஞ்சர் ஆப் வழியாக செல்பேசியில் பணப் பரிமாற்ற சேவையை வழங்க முடிவு செய்துள்ளது.

பணம் பரிமாற்றம் செய்யப்படும் இரு நபர்களிடமும் கடன் அட்டை (டெபிட் கார்டு) இருந்தாலே போதுமானது. எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக இந்த சேவையை வழங்குகிறது பேஸ்புக்.

தற்போது அமெரிக்காவில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் இந்த வசதி விரைவில் மற்ற நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஆன்ட்ராய்டு மொபைலில் இந்த வசதியை பயன்படுத்த முதலில் நாம் நமது டெபிட் கார்டு பற்றிய தகவல்களை பேஸ்புக் மெசஞ்சர் ஆப்-பில் சேர்க்க வேண்டும்.

#TamilSchoolmychoice

பணத்தை பிறருக்கு அனுப்பவும், பெறவும் ‘பேபால்’ என்ற டிரான்ஸ்பர் வசதியை போன்றே இதிலும் தரப்பட்டுள்ளது. பயனாளர்களின் டெபிட் கார்டு பற்றி விவரங்களை பாதுகாப்பதற்காக ‘பின் பேஸ்டு பாஸ்வேர்டு’ பாதுகாப்பும் தரப்பட்டுள்ளது.