Home Featured தமிழ் நாடு தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியில் தொகுதி பட்டியல் இன்று வெளியீடு!

தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியில் தொகுதி பட்டியல் இன்று வெளியீடு!

662
0
SHARE
Ad

dmdk, mnkசென்னை – தேமுதிக-மக்கள் நல கூட்டணி, த.மா.கா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, இன்று காலை, கூட்டணி தலைவர்கள் தொகுதிகளுக்கான பட்டியலை வெளியிடுகின்றனர்.

இதுதொடர்பாக, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், நேற்று நள்ளிரவு வரையில் ஆலோசனை நீடித்தது. இரண்டாவது நாளாக நீடித்த இந்த ஆலோசனையின் முடிவில், கூட்டணி கட்சிகளிடையே, போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஒருமித்த கருத்துக்கள் எட்டப்பட்டு, சுமூகமாக உடன்பாடு காணப்பட்டது.

கூட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், ஞானதேசிகன், எல்.கே.சுதீஷ், மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, ஈரோடு கணேச மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

#TamilSchoolmychoice

கூட்டத்தின் முடிவில், கூட்டணி சார்பாக செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இன்று தொகுதி பங்கீட்டு பட்டியல் வெளியிடப்படும் என்றார்.