Home Featured தமிழ் நாடு ஏமாற்றத்தை தந்துவிடாதீர்கள்: பிரச்சாரத்தை தொடங்கி கருணாநிதி உருக்கம்!

ஏமாற்றத்தை தந்துவிடாதீர்கள்: பிரச்சாரத்தை தொடங்கி கருணாநிதி உருக்கம்!

622
0
SHARE
Ad

karunanithiசென்னை – தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வரும் மகாராணி ராஜ்ஜியத்துக்கு முடிவுகட்டும் வகையில் ஆட்சி மாற்றத்தை தாருங்கள்; ஏமாற்றத்தை தந்துவிடாதீர்கள் என தமிழக மக்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி உருக்கமான வேண்டுகோள் விடுத்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி, சட்டமன்றத் தேர்தலுக்கான தனது முதல்கட்ட பிரச்சாரத்தை சென்னை சைதாப்பேட்டையில் நேற்று தொடங்கினார். சைதாப்பேட்டை ஐந்து விளக்கு பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது:

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் இந்த நேரத்தில் மக்களின் விடியல் முகங்களை பார்க்கும்போது பெரும் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் தருகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு செய்த தவறுக்கு பரிகாரமாக இந்த முறை திமுகவை வெற்றி பெறச் செய்வீர்கள் என நம்புகிறேன்.

#TamilSchoolmychoice

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்ற ஆட்சியைப் பற்றி வாக்களிக்கும் முன்பு நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். மக்களைச் சுரண்டி, அவர்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல் ஆணவத்தோடு ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள்.

மகாராணி ராஜ்ஜியத்துக்கு தமிழக மக்கள் முடிவுகட்ட வேண்டும். இந்த அவல ஆட்சிக்கு முடிவு கட்ட எங்களுக்கு சக்தி கொடுங்கள். திமுகவை ஆட்சியில் அமர்த்தினால்தான் தமிழகத்தில் ஒரு நல்லாட்சியை கொடுக்க முடியும். மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த முடியும். ஆட்சி மாற்றத்தை தாருங்கள்; ஏமாற்றத்தை தந்துவிடாதீர்கள் என கருணாநிதி பேசினார்.