Home உலகம் தமிழர் குரலை ஒலித்த நவநீதம்பிள்ளை! அதிரடியாய் வெளியேறிய இலங்கை பேச்சாளர்!

தமிழர் குரலை ஒலித்த நவநீதம்பிள்ளை! அதிரடியாய் வெளியேறிய இலங்கை பேச்சாளர்!

521
0
SHARE
Ad

indexஜெனிவா,மார்ச்.16-எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் ஈழச் சோகத்தின் கொடூர ரணம் ஆறவே ஆறாது. இது இந்திய நாடாளுமன்றம் தொடங்கி இங்கிலாந்து நாடாளுமன்றம், ஜெனிவா மனித உரிமை மன்றம் வரை ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.

உலகமெங்கும் இருந்து ஜெனிவாவுக்கு வந்திருக்கும் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தொடுக்கும் அடுக்கடுக்கான வினாக்களுக்கு விடை சொல்ல முடியாமல்  தவிக்கிறது இலங்கை அரசாங்கம்.

தமிழகத்தைப் போலவே பல்வேறு நாடுகளி​லிருந்தும் வந்திருந்த தமிழர்கள் ஜெனிவா மனித உரிமை மன்றத்துக்கு வெளியே நின்று கடுங்குளிரிலும் கொட்டும் பனியிலும் ‘ஈழத் தமிழனத்துக்கு நீதி வழங்க வேண்டி’ ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

யுத்தத்தில் நேரடி​யாகப் பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையில் இருந்தும் பல்வேறு புலம்பெயர் நாடுகளில் இருந்தும் ஜெனிவாவுக்கு வந்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் கமிஷனர் நவநீதம்பிள்ளையைச் சந்தித்து இலங்கை இராணுவத்துக்கு எதிராக சாட்சியங்களைப் பதிவுசெய்கின்றனர்.

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலையா என்பதை அறிய சர்வதேசப் போர் விசாரணை நடத்த வேண்டும். தமிழர் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கில் குடியமர்த்தப்பட்டு இருக்கும் ராணுவத்தை வெளியேற்றி,  ஜனநாயக முறையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

யுத்தத்தின்போது கைது​செய்யப்பட்ட அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்’ என்ற நான்கு மிக முக்கியமான கருத்துக்களை இலங்கைக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நவநீதம்பிள்ளையின் கருத்துக்களைச் சற்றும் எதிர்பாராத இலங்கை அரசின் ஐ.நா. பேச்சாளர் ரவிநாத‌ ஆரியசிங்க, ‘ஐ.நா-வின் நடவடிக்கை ஒருதலைபட்சமானது. கொஞ்சம்கூட நியாயமில்லாதது. தமிழர்கள் வசிக்கும் வடகிழக்கில் மீள்குடியேற்றம், பாதுகாப்பு வசதி, கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்கள் வேகமாக நடந்து வருகின்றன’ என வழக்கமான பாடலையே வாசித்துவிட்டு அரங்கத்தைவிட்டு வெளியேறினார்..

அதனால், சுதந்திரமான சர்வதேச போர் விசாரணை நடத்த வேண்டும். இறுதியாக, ஜனநாயக  முறையில் வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும்’ என, தகுந்த ஆதாரங்களோடும் சேனல் 4-ன் வீடியோ காட்சிகளோடும் விவரிக்கப்பட்டுள்ளது. அவர்களும் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து, இலங்கையில் நடைபெற்றது கொடூரமான இனப்படுகொலை என்பதை ஒப்புக்கொள்கின்றனர்.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தின் மீது வரும் 21-ம் தேதியோ அல்லது 22-ம் தேதியோ வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

வாக்கெடுப்புக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, கியூபா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் தீர்மானத்தின் சாராம்சத்தை சீர்குலைக்க எல்லா வேலைகளிலும் இலங்கை ஈடுபட்டுள்ளது

இலங்கை. தொடர்ந்து டெல்லியிலும், ஜெனிவாவில் உள்ள இந்தியப் பிரதிநிதிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஆனால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக நாடுகளின் ஒத்துழைப்போடு இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறும்” என நம்பிக்கையுடன் முடித்தார்.

21-ம் தேதியை உலகத் தமிழர்கள் உன்னிப்பாகக் கவனிப்பார்கள் என்பது திண்ணம்.