Home நாடு அல்தான்துன்யா கொலையை மறு விசாரணை செய்யவேண்டும் – வழக்கறிஞர் மன்றம் கோரிக்கை

அல்தான்துன்யா கொலையை மறு விசாரணை செய்யவேண்டும் – வழக்கறிஞர் மன்றம் கோரிக்கை

654
0
SHARE
Ad

Altantunya-Feature

கோலாலம்பூர், மார்ச் 16 –  தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவல்களின் அடிப்படையில் மங்கோலிய அழகி அல்தான்துன்யாவின் கொலையைப் பற்றி  மறுவிசாரணை நடத்த வேண்டும் என இன்று நடந்து முடிந்த வழக்கறிஞர் மன்ற ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தோபர் லியோங் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் காலமான தனியார் துப்பறிவாளர் பாலசுப்ரமணியத்தின் இரண்டாவது சத்தியப் பிரமாணத்தை தயாரித்த மூத்த வழக்கறிஞர், சிசில் ஆப்ரஹாம் மீது புகார் மனு ஒன்றை வழக்கறிஞர் மன்றம், வழக்கறிஞர்களுக்கான ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் மேல்விசாரணைக்கு சமர்ப்பிக்கும்.

#TamilSchoolmychoice

“நாங்கள் வழக்கறிஞர்கள் அமெரிக் சிடு மற்றும் கம்பள வணிகர் தீபக் ஜெய்கிஷன் ஆகியோரிடமிருந்து அவர்களின் வாக்குமூலங்களைப் பெறுவோம். தற்போது எழுந்துள்ள புதிய தகவல்கள் அடிப்படையில் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அல்தான்துன்யா கொலையைப் பற்றிய மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம். ஆரம்பம் முதல் இந்த கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு போலீஸ்காரர்கள் அல்தான்துன்யாவைக் கொலை செய்வதற்கு எந்தவித காரணமும் இல்லை என்ற சந்தேகத்தை பல தரப்பினர் எழுப்பி வந்திருக்கின்றார்கள் என்பதையும் நாங்கள் குறிப்பிட விரும்புகின்றோம்” என்றும் கிறிஸ்தோபர் லியோங் கூறினார்.