Home Featured நாடு சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: 4ஆம் நாள் தேடுதலில் பல உடைந்த பாகங்கள் மீட்பு!

சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: 4ஆம் நாள் தேடுதலில் பல உடைந்த பாகங்கள் மீட்பு!

583
0
SHARE
Ad

கூச்சிங் – கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த சரவாக் ஹெலிகாப்டர் விபத்தைத் தொடர்ந்து நேற்று நான்காவது நாளாகத் தொடர்ந்த மீட்புப் பணிகளின் மூலமாக, அந்த ஹெலிகாப்டரின் உடைந்த, சிதைந்த பாகங்கள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஒரு நாற்காலி மெத்தையை நேற்று மீட்புக் குழுவினர் கண்டெடுத்தனர். மேலும் சில உடைந்த பாகங்களும் கண்டெடுக்கப்பட்டன.

Sarawak helicopter crash-pathவிபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் பயணம் செய்த பாதையைக் காட்டும் வரைபடம்….

#TamilSchoolmychoice

நேற்று சுமார் 650 பேர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மீட்புக் குழுவினரின் எண்ணிக்கை இன்று முதல் அதிகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரும்புப் பாகங்களை அடையாளம் காட்டும் கருவிகள் மீட்புப் பணிகளில் பயன்படுத்தப்பட்டாலும், மீட்புக் குழுவினர் சில சிரமங்களையும், சவால்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.  பத்தாங் லுப்பார் ஆற்றின் வேகமான நீர்வரத்து அதில் ஒன்றாகும்.

ஹெலிகாப்டரைச் செலுத்திய விமானியின் சடலத்தைக் குறி வைத்து மீட்புப் பணிகள் இன்றும் தொடரும்.