கொழும்பு – இலங்கையில் நிலச்சரிவுகளிலும் வெள்ளத்திலும் 73 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 30 பேர் காயமடைந்தனர். சுமார் 130 பேரை இன்னமும் காணவில்லை.
நூற்றுக்கும் அதிகமானோர் வீடுகளைவிட்டு வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் பேரிடர் நிர்வாக நிலையம் அந்தத் தகவலை வெளியிட்டது.
காமன்வெல்த் அமைப்பின் தலைமைச் செயலாளர் பெட்ரிஷா ஸ்காட்லண்ட் அந்த வேண்டுகோளை விடுத்தார். பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் தமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்தார்.
இந்த இக்கட்டான நிலையில் இலங்கைக்குத் தேவையான எவ்வித உதவியையும் வழங்கத் தயாராக இருப்பதாய் ஆஸ்திரேலியா உறுதிகூறியுள்ளது.
சில நாட்களுக்குமுன் இலங்கையை ரொனு சூறாவளி தாக்கியதில் அங்கு கடும் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.