ஜார்ஜ் டவுன் – ரமடான் மாதத்தில் நோன்பைபைத் தவிர்க்கும் முஸ்லிம்களை கண்காணிக்க, பினாங்கில் 50 முக்கிய இடங்களில், மாநில இஸ்லாமிய விவகாரத் துறை அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படவுள்ளனர்.
உணவகங்கள், கணினி மையங்கள், ஸ்னூக்கர் விளையாட்டு மையங்கள், குடும்ப கேளிக்கை மையங்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட 50 இடங்களில் இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எ’A) பினாங்கு மாநில மத விவகாரக் குழுவின் தலைவர் அப்துல் மாலிக் அப்துல் காசிம் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நோன்பு மாதத்தில் சாப்பிடும் முஸ்லிம்ககள் மீது, கடந்த ஆண்டு இயற்றப்பட்ட பினாங்கு ஷரியா கிரிமினல் குற்றங்கள் சட்டம், பிரிவு 15-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்துல் மாலிக் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், நோன்பு நோர்க்கும் நேரத்தில், முஸ்லிம்களுக்கு யாராவது உணவு, தண்ணீர் அல்லது சிகரெட் விற்பனை செய்து, அதை அவர்கள் உ%=FE0கொண்டால் உடனடியாக விற்பனை செய்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்துல் மாலிக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
படம்: கோப்ப81%E %E் படம் (ரமடான் 2014)