Home Featured வணிகம் புதிய புரோட்டோன் பெர்டானா அறிமுகம் ஆனது!

புதிய புரோட்டோன் பெர்டானா அறிமுகம் ஆனது!

608
0
SHARE
Ad

Proton_Perdana_24_Red_Ext_04-1-850x465புத்ராஜெயா – புதிய நான்காம் தலைமுறை புரோட்டோன் பெர்டானாவை இன்று செவ்வாய்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது புரோட்டோன் ஹோல்டிங்க்ஸ் பெர்ஹாட் நிறுவனம்.

புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் இன்று நடைபெற்ற அறிமுக விழாவில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கலந்து கொண்டு அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார்.

113,888 ரிங்கிட் விலை கொண்ட இந்த புதிய புரோட்டோன் பெர்டானா காரை வாங்க, கடந்த பிப்ரவரி மாதம் முதல் பொதுமக்கள் முன்பதிவு செய்து வருவதாக புரோட்டோன் தலைமைச் செயலதிகாரி டத்தோ அகமட் ஃபாட் கெனாலி அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதுவரை 900 பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில், 2016-ம் ஆண்டு முடிவிற்குள் 3,000 கார்களை விற்க தாங்கள் முடிவு செய்துள்ளதாகவும் அகமட் ஃபாட் தெரிவித்துள்ளார்.

படம்: நன்றி (Paultan.org)