Home Featured தமிழ் நாடு ஹிலாரி கிளிண்டனுக்கு ஜெயலலிதா வாழ்த்துக் கடிதம் – 2011 சந்திப்பை நினைவு கூர்ந்தார்!

ஹிலாரி கிளிண்டனுக்கு ஜெயலலிதா வாழ்த்துக் கடிதம் – 2011 சந்திப்பை நினைவு கூர்ந்தார்!

663
0
SHARE
Ad

சென்னை – அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராகத் தேர்வு பெற்றிருக்கும் ஹிலாரி கிளிண்டனுக்கு, தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு ஜலை மாதத்தில் ஹிலாரி மேற்கொண்ட இந்திய வருகையின்போது, சென்னையில் அவருடன் நடத்திய சந்திப்பையும் ஜெயலலிதா தனது கடிதத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.

Indian Chief Minister J. Jayalalithaa (L

கடந்த 2011ஆம் ஆண்டு சென்னை சந்திப்பின்போது ஜெயலலிதா-ஹிலாரி…

#TamilSchoolmychoice

“ஜனநாயக செயல்கட்சியின் வேட்பாளராகத் தேர்வு பெற்றதற்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள். தங்களின் தேர்வு உலக அளவில் அனைத்து பெண்களுக்கும் பெருமையும், திருப்தியும் அளிக்கும் தேர்வாகும். அதிலும் குறிப்பாக, ஜனநாயகத் தேர்தல்களைக் கொண்ட நாடுகளில், அமெரிக்காவின் இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றின் வேட்பாளராகத் தாங்கள் தேர்வாகியிருப்பது உண்மையிலேயே பெருமைக்குரியதாகும்” என ஜெயலலிதா தனது வாழ்த்து கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

“இத்தகைய சரித்திரம் படைத்திருப்பதன் மூலம், அனைத்துலக அளவில் மகளிர் குரல் ஓங்கவும், மகளிர் அரசியல் சக்திக்கு வலுவூட்டும் நம்பிக்கை ஏற்படவும், தாங்கள் வழி வகுத்துள்ளீர்கள். இந்த தருணத்தில் கடந்த 20 ஜூலை 2011 அன்று அமெரிக்க வெளியுறவு அமைச்சராகத் தாங்கள் சென்னை வந்தபோது, தங்களைச் சந்தித்து பல்வேறு பரஸ்பர விஷயங்களைத் தங்களோடு பகிர்ந்து கொண்ட இனிய தருணங்களை நினைவு கூர்கின்றேன்” என்றும் ஜெயலலிதா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

நவம்பரில் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியடையவும் ஹிலாரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஜெயலலிதா ஹிலாரியின் அரசியல் உச்சகட்ட வளர்ச்சியினால், அவர் உலகமெங்கும் உள்ள பெண்களுக்கு உதாரணப் பெண்மணியாகத் திகழ்கின்றார் என்றும் தனது கடிதத்தில் வர்ணித்துள்ளார்.