கடந்த திங்கட்கிழமை, இராணுவப் பயிற்சி மையத்தைச் சேர்ந்த மிருகக்காட்சி சாலையைச் சேர்ந்த அந்த ஜாகுவாரை, நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்த இராணுவ வீரர் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கில் சுட்டுக் கொன்றுள்ளார்.
“அமைதியையும், ஒற்றுமையையும் பறைச்சாற்றும் ஒலிம்பிக் தீப நிகழ்ச்சியில், ஒரு பக்கம், சிறுத்தை ஒன்றை சங்கிலியால் கட்டி காட்சிக்கு வைக்க அனுமதித்தது எங்களின் தவறு தான். எங்களின் நம்பிக்கைகள் மற்றும் மதிப்புக்கு எதிராக அது அமைந்துவிட்டது. ரியோ 2016-ல் இது போன்ற தவறுகள் இதற்கு மேலும் நடக்காது என்பதை உறுதியாகக் கூறிக் கொள்கிறோம்” என்று அந்நாட்டு இராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தற்போது சர்ச்சையாகியுள்ள இந்த விவகாரம் குறித்து, உலகின் பல்வேறு விலங்குகள் உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.