Home Featured தொழில் நுட்பம் ஜிக்காவுக்கு எதிராகப் போராட புதிய கருவிகள் – சோதனை முயற்சியில் மைக்ரோசாப்ட்!

ஜிக்காவுக்கு எதிராகப் போராட புதிய கருவிகள் – சோதனை முயற்சியில் மைக்ரோசாப்ட்!

744
0
SHARE
Ad

டெக்சாஸ் – அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஹாரிஸ் கண்ட்ரி என்ற இடத்தில், ஜிக்கா உள்ளிட்ட நோய் பரப்பும் கிருமிகளைக் கண்டறிய புதிய கருவிகள் சோதனை முயற்சியில் வைக்கப்பட்டுள்ளன.

கிருமிகளுக்கு எதிராகப் போராடுவதில் இந்தப் புதிய கருவிகள் மிகவும் உதவியாக இருக்கும் என சுகாதார அதிகாரிகள் நம்புகின்றனர்.

microsoft-zikaவரும் ஜூலை முதல் வாரம் தொடங்கி இந்தக் கருவிகள் செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொசுக்களால் பரவும் நோய்களையும், நோய் பரவியவுடன் உடனடியாக சம்பந்தப்பட்ட இடங்களின் தரவுகளையும் இந்தக் கருவிகள் அடையாளம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

“இது ஒரு நவீன வகை கொசுக்களை கட்டுப்படுத்தும் முறை. இதற்கு முன்பு இந்த நாட்டில் இது போல் இல்லை” என ஹாரிஸ் கண்ட்ரியின் சுகாதாரத்துறையைச் சேர்ந்த அதிகாரி உமைர் ஷா தெரிவித்துள்ளார்.

இந்தக் கருவிகளைத் தயாரித்திருப்பது புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு என்பது கூடுதல் சிறப்பு.