“அந்தத் தண்ணீர் பல்வேறு நோய்களைத் தீர்ப்பதாக மக்களை நம்பவைத்து விளம்பரப்படுத்தப்படுகின்றது. அப்படிப்பட்ட விளம்பரங்களை சுகாதார அமைச்சு மிகவும் கடுமையாகப் பார்க்கின்றது. உணவு ஒழுங்குமுறை 1985, உணவுச் சட்டம் 1983-ன் படி, குடிப்பதற்காக பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் தண்ணீர் அனைத்தும் சுகாதார அமைச்சின் அனுமதியும், உரிமமும் பெற்றிருக்க வேண்டும்” என்று சுகாதார அமைச்சின் பொது இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.