Home Featured நாடு 150 வகை நோய்களைத் தீர்க்கும் மருத்துவத் தண்ணீரா? – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

150 வகை நோய்களைத் தீர்க்கும் மருத்துவத் தண்ணீரா? – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

539
0
SHARE
Ad

change-your-water-resizedகோலாலம்பூர் – ஒரு வகையான கார நீர் வடிகட்டி (alkaline water filter) கொண்டு பெறப்படும் தண்ணீர் (Kangen water) 150 வகை தீராத நோய்களைத் தீர்ப்பதாக நட்பு ஊடகங்களில் பரவி வரும் தகவலை சுட்டிக் காட்டியுள்ள சுகாதார அமைச்சு, அது போன்ற தண்ணீரை விற்பனை செய்வதோ, விளம்பரப்படுத்தவோ செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

“அந்தத் தண்ணீர் பல்வேறு நோய்களைத் தீர்ப்பதாக மக்களை நம்பவைத்து விளம்பரப்படுத்தப்படுகின்றது. அப்படிப்பட்ட விளம்பரங்களை சுகாதார அமைச்சு மிகவும் கடுமையாகப் பார்க்கின்றது. உணவு ஒழுங்குமுறை 1985, உணவுச் சட்டம் 1983-ன் படி, குடிப்பதற்காக பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் தண்ணீர் அனைத்தும் சுகாதார அமைச்சின் அனுமதியும், உரிமமும் பெற்றிருக்க வேண்டும்” என்று சுகாதார அமைச்சின் பொது இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice