புதுடில்லி – சர்ச்சைச்சைக்குரிய இஸ்லாம் மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்ய 9 குழுக்களை அமைத்துள்ளது இந்திய அரசு.
பயங்கரவாதத்தைத் தூண்டுவது போல் ஜாகிர் நாயக்கின் பேச்சு இருப்பதாக, அண்மையில் எழுந்த கண்டனங்களை அடுத்து, அவரது பேச்சை கடுமையாகக் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், ஜாகிர் நாயக்கின் உரையை ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி, தேசியப் புலனாய்வு அமைப்பு, உளவுத்துறை, உள்துறை அமைச்சக குழு உள்ளிட்ட 9 குழுக்கள் ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்ய உள்ளன.
இவற்றில் 4 குழுக்கள் ஜாகிர் நாயக்கின் உரைகள் குறித்து சேகரிக்கப்பட்ட ஆதாரங்களையும், 3 குழுக்கள் அவரின் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட நட்பு ஊடகப் பதிவுகளையும் ஆய்வு செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.