Home Featured நாடு “பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து மலேசியா” – உதயமாகிறது!

“பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து மலேசியா” – உதயமாகிறது!

776
0
SHARE
Ad

mahathir-muhyiddin-comboகோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் துன் மகாதீர், முன்னாள் துணைப் பிரதமர் மொகிதின் யாசின் வழிநடத்தப் போகும் புதிய அரசியல் கட்சியாக “பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து மலேசியா” இன்று உதயமாகின்றது.

“மலேசிய மண்ணின் மைந்தர்களின் ஒற்றுமைக் கட்சி” என்பது இதன் தமிழ் அர்த்தமாகும்.

சுருக்கமாக பெர்சாத்து என இந்தக் கட்சி அழைக்கப்படும். இந்தக் கட்சிக்கான அதிகாரபூர்வ பதிவுக்கான ஆவணங்கள் இன்று சங்கப் பதிவகத்தில் சமர்ப்பிக்கப்படும்.

#TamilSchoolmychoice

மொகிதின் யாசின் நேரடியாக இந்த ஆவணங்களை புத்ரா ஜெயாவிலுள்ள சங்கப் பதிவக அலுவலகத்தில் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தக் கட்சி பூமிபுத்ராக்கள் மட்டுமே உறுப்பினர்களாகக் கூடிய கட்சியாக இருக்கும் என ஆரூடங்கள் நிலவும் நிலையில், கட்சியின் பெயரில் ‘பிரிபூமி’ என்ற பெயர் சேர்க்கப்பட்டிருப்பது அதனை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.

பிரிபூமி என்பது மண்ணின் மைந்தர்கள் எனப் பொருள் குறிக்கின்றது. பூமிபுத்ராக்கள் ‘பிரிபூமி’ என்றும் மலாய் மொழியில் குறிப்பிடப்பபடுகிறார்கள்.

அம்னோவுக்கு மாற்றான கட்சியாக பார்க்கப்பட வேண்டும், அம்னோ உறுப்பினர்கள் பிரிந்து வந்து சேரும் வகையில் கட்சி இருக்க வேண்டும் என்ற நோக்கங்களோடு அமைக்கப்படுவதால், பூமிபுத்ராக்கள் மட்டுமே இந்தக் கட்சியில் சேர முடியும் என்ற நிபந்தனையோடு புதிய கட்சி தோற்றுவிக்கப் படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.