Home Featured உலகம் ஒலிம்பிக்ஸ் : நான்காவதாக வந்த தமிழர் சதீஷ்!

ஒலிம்பிக்ஸ் : நான்காவதாக வந்த தமிழர் சதீஷ்!

654
0
SHARE
Ad

olympics-sathish-sivalingam-weight lifting

ரியோ டி ஜெனிரோ – ஒலிம்பிக்சில் பளுதூக்கும் போட்டியில் இந்தியக் குழுவில் இடம் பெற்றிருந்த தமிழரான சதீஷ் சிவலிங்கம், ஏதாவது ஒரு பதக்கத்தைப் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால், சதீஷ் கடுமையான போட்டிக்கிடையில் நான்காவதாகவே வர முடிந்தது.

இதன் காரணமாக, அவர் வெண்கலப் பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார். 77 கிலோ ஆண்களுக்கான பிரிவில் போட்டியிட்ட சதீஷ் 329 கிலோ பளுதூக்கி நான்காவதாக வந்தார்.

#TamilSchoolmychoice

இவர் 2014ஆம் ஆண்டில் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளுக்கான போட்டியில் தங்கம் வென்றவராவார்.