Home Featured நாடு “சோதிநாதன் பேச்சு வார்த்தையில் சம்பந்தமில்லை என்பது உண்மையில்லை” – இராமலிங்கம் விளக்கம்!

“சோதிநாதன் பேச்சு வார்த்தையில் சம்பந்தமில்லை என்பது உண்மையில்லை” – இராமலிங்கம் விளக்கம்!

879
0
SHARE
Ad

ramalingam-mic

கோலாலம்பூர் – மஇகா விவகாரத்தில் டத்தோ சோதிநாதன், டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ராவுடன் நடத்தும் பேச்சு வார்த்தையில் எங்களுக்கு சம்பந்தமில்லை என்ற செய்தி தவறானது என்று டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினரின் சார்பில் ஏ.கே.இராமலிங்கம் (படம்) விளக்கம் தந்துள்ளார்.

நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் தான் தெரிவித்த கருத்துக்கள் குறித்தும், இன்று புதன்கிழமை, செல்லியலில் வெளியிடப்பட்ட செய்தி குறித்தும் விளக்கம் தந்த இராமலிங்கம், “டத்தோ சோதிநாதன், டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்துடன் பேச்சு வார்த்தை நடத்த நாங்கள் முழு ஆதரவும், ஒத்துழைப்பும் தந்துள்ளோம். எனவே, அந்தப் பேச்சு வார்த்தையில் எங்களுக்கு சம்பந்தமில்லை என வெளிவந்திருக்கும் செய்தி தவறானது. மாறாக, மஇகாவில் மீண்டும் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும், அதிலும், 2012இல் பதிவு செய்யப்பட்ட கிளைகளின் பேராளர்களைக் கொண்டு மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் டத்தோ சோதிநாதன் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சு வார்த்தை நடத்த நாங்கள் அனுமதியும், ஆதரவும் தந்திருக்கின்றோம்” என்றும் இராமலிங்கம் தங்களின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice