Home Featured கலையுலகம் திரைப்பட விழா சர்ச்சைக்கு முடிவு: எல்லாப் படங்களும் போட்டியிலாம் என அறிவிப்பு!

திரைப்பட விழா சர்ச்சைக்கு முடிவு: எல்லாப் படங்களும் போட்டியிலாம் என அறிவிப்பு!

829
0
SHARE
Ad

Jagatகோலாலம்பூர் – இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மலேசிய திரைப்பட விருது விழாவில், சிறந்த படப்பிரிவில் நிலவி வந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்துள்ளது.

அப்பிரிவில் மொழி வாரியான பிரிவினை இன்றி எல்லாப் படங்களும் போட்டியிடலாம் என தகவல்தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சாலே சையட் கெருவாக் இன்று புதன்கிழமை அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அப்பிரிவில் போட்டியிட முடியாமல் சிக்கலில் இருந்த ‘ஜகாட்’, ‘ஒலாபோலா’ உள்ளிட்ட திரைப்படங்கள் தற்போது அதில் போட்டியிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அதேவேளையில், தேசிய மொழிக்கென தனிப் பிரிவு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சிறந்த படங்களுக்கான தேர்வு நடைபெறும் என்பதையும் சாலே அறிவித்துள்ளார்.

கலைஞர்கள் முதல் பொதுமக்கள் வரை, அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்த பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் சாலே தெரிவித்துள்ளார்.

திரைப்படத் தணிக்கை வாரியத்தின் இவ்வாண்டு திரைப்பட விழாவில்  சிறந்த படம் , சிறந்த திரைக்கதை,சிறந்த இயக்குநர் ஆகியவற்றுக்கான விருதுகள் மொழி அடிப்படையில் வழங்கவிருப்பதை மஇகா கண்டித்தது குறிப்பிடத்தக்கது.