Home Featured உலகம் கூகுள் நிறுவன பெண் பணியாளர் கற்பழித்து, எரித்துக் கொலை!

கூகுள் நிறுவன பெண் பணியாளர் கற்பழித்து, எரித்துக் கொலை!

822
0
SHARE
Ad

Google employerநியூயார்க் – அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள கூகுள் நிறுவனத்தில், நிதித்துறை மேலாளராக பணியாற்றி வந்த வனேசா மார்கோட்டி(27), நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, மர்ம நபர்களால் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மாசாச்சூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள பிரின்ஸ்டன் புறநகர் பகுதியில் வசித்து வந்த தனது தாய் வீட்டிற்கு விடுமுறையில் சென்றிருந்த வனேசா, சம்பவத்தன்று மாலை நடைப்பயிற்சி மேற்கொள்ளச் சென்றுள்ளார்.

வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாத காரணத்தால், கவலையடைந்த அவரது தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

 

அதனைத் தொடர்ந்து, காவல்துறை மேற்கொண்ட தேடுதல் பணியில், அவரது வீட்டிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் மரக்கட்டைகளுக்கு இடையில் கற்பழித்து, எரிக்கப்பட்ட நிலையில் ஒரு பிரேதம் கிடந்துள்ளது.

விசாரணையில் அது வனேசாவின் உடல் தான் எனத் தெரியவந்துள்ளது. பலாத்காரம் செய்யப்பட்ட மார்கோட் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் அவரது தலை, கால் ஆகிய பாகங்கள் மட்டும் எரிந்துள்ளன என பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

மார்கோட்டின் மரணம் குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், வனேசா மார்கோட்டின் இறப்பால் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அலுவகத்தில் தனது பணியில் கண்ணும் கருத்துமாக இருந்து, அனைவரிடமும் அன்பாக பழகும் குணம் கொண்ட வனேசா மார்கோட்டின் இறப்பு எங்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.