Home Featured தமிழ் நாடு பெண்கள் விவகாரம்: ஈஷா யோகா மையத்தில் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு!

பெண்கள் விவகாரம்: ஈஷா யோகா மையத்தில் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு!

763
0
SHARE
Ad

madrasசென்னை – கோவை மாவட்டத்தில் இருக்கும் ஈஷா யோகா மையத்தின் மீது சத்திய ஜோதி என்பவர் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில், ‘என்னுடைய மகள் லதா, கீதா ஆகியோர் ஈஷா யோகா மையத்துக்கு சென்று வந்தனர். திடீரென அவர்கள் அங்கேயே தங்கத் தொடங்கினார்கள். தற்போது அவர்கள் மொட்டை அடிக்கப்பட்டு, சன்னியாசியாக மாற்றப்பட்டுள்ளனர். அவர்களை சட்டவிரோதமாக ஈஷா யோகா மையத்தின் பிடித்து வைத்துள்ளனர். இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்டோருக்கு புகார் செய்தும் எந்த பயனும் இல்லை. எனவே, சட்டவிரோதமாக பிடித்து வைக்கப்பட்டுள்ள என்னுடைய மகள்களை இந்த கோர்ட்டில் ஆஜர்படுத்த கோவை போலீசாருக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் முன்பு இன்று புதன்கிழமை காலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

#TamilSchoolmychoice

“ஈஷா யோகா மையத்தில், சில நம்பிக்கைகளுடன் பல பக்தர்கள் தங்கியுள்ளனர். மேலும், இந்த மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், மனுதாரர் மகள்களின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பானது. எனவே, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட விரும்பவில்லை. அதேநேரம், கோவை மாவட்ட முதன்மை நீதிபதி, ஈஷா யோகா மைத்துக்கு இன்று பிற்பகல் 3 மணிக்குள் செல்லவேண்டும். அவருடன் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் செல்லவேண்டும். ஈஷா மையத்தில் வேறு சில பெண்களும் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ளதாக, காவல்நிலையங்களில் புகார் செய்யப்பட்டுள்ளதாக தெரிகின்றது. எனவே புகார் பெற்ற அந்தக் காவல்நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகளும் உடன் செல்ல வேண்டும்”

“போகும்போது அங்கு தங்கியிருக்கும் பிற பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் சென்று, சம்பந்தப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தவேண்டும். அவர்கள் சொந்த விருப்பத்தின் பேரில்தான் அங்கு தங்கியிருக்கிறார்களா? அல்லது யாராவது கட்டாயப்படுத்தி சட்டவிரோதமாக பிடித்து வைத்துள்ளனரா? உள்ளிட்டவை குறித்து அவர்களிடம் கேள்விக் கேட்டு, அவர்கள் கூறும் பதில்களை, விரிவான அறிக்கையாக கோவை மாவட்ட நீதிபதி, உயர்நீதிமன்றத்திடம் தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கு விசாரணையை நாளை (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.” என்று தெரிவித்துள்ளனர்.