ரியோ – ஒலிம்பிக்ஸ் 100 மீட்டர் போட்டியில் தங்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்படும் நடப்பு சாதனையாளர் உசேன் போல்ட் (படம்-மஞ்சள் மேலாடையுடன்), தகுதிச் சுற்று ஓட்டத்தில் (heats) நேற்று சனிக்கிழமை தேர்வு பெற்றார்.
ஜமைக்கா நாட்டின் போல்ட் நேற்றைய தகுதிச் சுற்றில் 10.07 வினாடிகளில் ஓடி தன்னுடன் ஓடியவர்களில் முதலாவதாக வந்தார். அடுத்து அரை இறுதி சுற்றுக்குத் தேர்வாகியுள்ள அவருக்கு அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின் கடுமையான போட்டியை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுவரை நடந்த தகுதிச் சுற்று ஓட்டங்களிலேயே அதிக வேகத்தில் – 10.01 வினாடிகளில் – ஓடி ஜஸ்டிடின் காட்லின் தேர்வு பெற்றிருக்கின்றார்.
எனவே, உசேன் போல்ட் தனது ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை மீண்டும் இரண்டாவது முறையாக வெற்றி கொண்டு சாதனை படைப்பாரா அல்லது மற்ற போட்டியாளர்கள் அவரை மிஞ்சுவார்களா என்பதைக் காண விளையாட்டு ஆர்வலர்கள் காத்திருக்கின்றனர்.