Home Featured உலகம் 100 மீட்டர் ஓட்டம் : தங்கம் – வெண்கலம் வென்ற ஜமைக்கா பெண்கள்!

100 மீட்டர் ஓட்டம் : தங்கம் – வெண்கலம் வென்ற ஜமைக்கா பெண்கள்!

503
0
SHARE
Ad

olympics-100 m - women- elain thompson -jamaica

ரியோ டி ஜெனிரோ – ஒலிம்பிக்சில் (பிரேசில் நேரப்படி) சனிக்கிழமை இரவு நடைபெற்ற 100 மீட்டர் பெண்களுக்கான ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்காவைச் சேர்ந்த இரு பெண்கள் ஒருசேர வாகை சூடியுள்ளனர்.

ஜமைக்காவின் எலெய்ன் தோம்சன் 10.71 வினாடிகளில் 100 மீட்டர் தூரத்தைக் கடந்து தங்கம் வென்ற வேளையில், அமெரிக்காவின் டோரி போவி 10.83 வினாடிகளில் ஓடி வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

#TamilSchoolmychoice

மூன்றாவதாக, ஜமைக்காவின் ஷெல்லி ஆன் பிரேசர் பிரைஸ் 10.86 வினாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கம் பெற்றார்.

இதன் மூலம் ஒரே நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள் ஒரே போட்டியில் தங்கம், வெண்கலம் வென்றுள்ளனர்.