Home Featured உலகம் ஒலிம்பிக்ஸ் : பெல்ப்ஸ் 23-வது தங்கம்!

ஒலிம்பிக்ஸ் : பெல்ப்ஸ் 23-வது தங்கம்!

588
0
SHARE
Ad

olympics-michael phelps-

ரியோ டி ஜெனிரோ – அமெரிக்காவின் மைக்கல் பெல்ப்ஸ் நேற்று தான் பங்கு பெற்ற இறுதி நீச்சல் போட்டியில் 23வது தங்கத்தை வென்று சாதனை படைத்தார்.

நேற்று இரவு (பிரேசில் நேரப்படி – மலேசிய நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை) நடைபெற்ற ஆண்களுக்கான, 4 X 100 மீட்டர் கலப்பு தொடர் நீச்சலில், (Medley – Relay) அமெரிக்கக் குழு முதல் இடத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த பெல்ப்ஸ் தங்கப் பதக்கம் பெற்றார்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து 23வது தங்கத்தைப் பெற்று மாபெரும் சாதனை புரிந்துள்ளார் பெல்ப்ஸ்.

பெல்ப்ஸ் 23வது தங்கம் பெற்ற காட்சியை அவரது மனைவியும் கைக்குழந்தையும் பார்வையாளர்கள் மேடையில் இருந்து கண்டு களித்தனர் என்பது பெல்ப்ஸ் வாழ்க்கையின் மற்றொரு நெகிழ்ச்சியான தருணமாகும்.