Home நாடு இஸ்ரேல் விவகாரம் : அனைத்துலக நீச்சல் போட்டியை நடத்தும் உரிமை இரத்து!

இஸ்ரேல் விவகாரம் : அனைத்துலக நீச்சல் போட்டியை நடத்தும் உரிமை இரத்து!

1745
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வருகிற ஜூலை 29-ஆம் தேதியிலிருந்து, ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரையிலும், மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்துலக நீச்சல் போட்டியை, மலேசியா, ஏற்று நடத்துவதற்கான உரிமையை அனைத்துலக பாராலிம்பிக் அமைப்பு (IPC) இரத்து செய்தது.

இஸ்ரேலிய நீச்சல் வீரர்கள் போட்டியில் பங்கேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாலும், அவர்களின் பாதுகாப்புக்குத் தேவையான உத்தரவாதத்தை வழங்குவதில் மலேசிய உள்துறை அமைச்சு தோல்வியுற்றதாலும் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவ்வமைப்பு அறிக்கை ஒன்றின் வாயிலாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தது.

பாராலிம்பிக் அமைப்பு எப்போதும் அனைவருக்கும் போட்டியில் பங்கெடுக்கும் வாய்ப்பினை வழங்குவதை ஆதரிக்குமேத் தவிர, அவர்களை தவிர்ப்பதற்கு அல்ல. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நாடு மட்டுமல்லாமல், இனி வேறு நாடுகளும் இதையே, பின்பற்றினால், இதே முடிவை எடுப்போம்”, என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

#TamilSchoolmychoice

மேலும், இப்போட்டியினை ஏற்று நடத்துவதற்கு வேறு நாடுகளுக்கு வாய்ப்புகள் திறக்கப்பட்டுவிட்டதாகவும், வருகிற பிப்ரவரி 11-ஆம் தேதிக்குள் , இப்போட்டியினை ஏற்று நடத்த ஆர்வம் கொண்ட நாடுகள் முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றன.