Home Featured நாடு “சுப்ராவுடன் பேச்சு வார்த்தை நடத்துவது உண்மை! கட்சிக்கு திரும்புவதே நமது போராட்டம் – புதிய கட்சி...

“சுப்ராவுடன் பேச்சு வார்த்தை நடத்துவது உண்மை! கட்சிக்கு திரும்புவதே நமது போராட்டம் – புதிய கட்சி தேவையில்லை!” சோதிநாதன் மேடையில் பகிரங்கம்!

1075
0
SHARE
Ad

sothinathan-mic-taiping meeting-13 aug

தைப்பிங் – நேற்று சனிக்கிழமை மாலை, இங்கு நடைபெற்ற பழனிவேல் தரப்பில் இயங்கும் வட பேராக் மஇகா கிளைகளின் தலைவர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய டத்தோ எஸ்.சோதிநாதன் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்துடன் தான் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி வருவது உண்மை என முதன் முறையாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

“சில வாரங்களுக்கு முன்னால் பழனிவேல் தரப்பில் இயங்கும் முக்கியத் தலைவர்கள் 10 பேருடன் நடத்திய கலந்தாலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வழங்கிய அனுமதியின் பேரிலேயே நான் சுப்ராவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன். மற்றபடி தனிப்பட்ட முறையிலோ, எனது சொந்த நலனுக்காகவோ நான் பேச்சு வார்த்தையில் ஈடுபடவில்லை” என்றும் சோதிநாதன் தனது உரையில் தெளிவுபடுத்தினார்.

#TamilSchoolmychoice

sothinathan-mic-taiping-crowd பழனிவேல் தரப்பினரின் வட பேராக் வட்டார மஇகா தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர்…

“மஇகா பிளவுபடக் கூடாது, அனைவரும் கட்சிக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு” என்றும் உறுதிபடக் குறிப்பிட்ட சோதிநாதன் “ஆனால் இப்போது நாம் எங்கே போகிறோம்? எதை நோக்கி செல்கிறது நமது போராட்டம்? எத்தனை நாளைக்கு இந்தப் போராட்டம்” என்றும் கூட்டத்தினரைப் பார்த்து கேள்வி தொடுத்ததாக, நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட பழனிவேல் தரப்பு மஇகா கிளைத் தலைவர் ஒருவர் ‘செல்லியலிடம்’ தெரிவித்தார்.

நடப்பு அரசியல் நிலவரங்களையும் விளக்கிய சோதிநாதன், கட்சிதான் நமக்கு முக்கியம் என்றும் வலியுறுத்தியதோடு, அதற்கு மாற்றாக புதிய கட்சி தொடக்குவது என்பது சரியான தீர்வாக அமையாது என்றும் தனது உரையில் கூறியிருக்கின்றார். “புதிய கட்சி என்று வந்தால், அதனை நடத்துவது அத்தனை சுலபமல்ல. அதற்கென பெரும் செலவுகள் ஏற்படும். அதற்குள் பொதுத் தேர்தல் வந்து விடும். நமக்கு தேர்தலில் வாய்ப்பு கிடைக்காது என்பதோடு, நமது ஆதரவாளர்கள் பலர் தேசிய முன்னணிக்கு வெளியில் நிற்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.

sothinathan-mic-taiping-13 aug 2016-stageநேற்றைய கூட்டத்தில் சோதிநாதன் மற்றும் பழனிவேல் தரப்பு தலைவர்கள்….

“ராமலிங்கம் தொடுத்துள்ள வழக்கு அதன்படி நடக்கட்டும். ஆனால், இதற்கிடையில் நான் ஈடுபட்டுள்ள பேச்சு வார்த்தைகள் திருப்திகரமாக, சாதகமாக அமைந்தால் நாம் அனைவரும் மீண்டும் கட்சிக்குத் திரும்புவோம். கட்சிக்கும் திரும்புவதும், கட்சியின் நலனும், கட்சி பிளவுபடக் கூடாது என்பதும்தான் நமது போராட்டமாக இருக்கவேண்டுமே தவிர, நாம் உணர்ச்சி வசப்படக் கூடாது. நிதானமாக இயங்க வேண்டும். உணர்ச்சி வசப்பட்டு தவறான பாதையை நோக்கி போய்விடக்கூடாது” என்றும் சோதிநாதன் கூட்டத்தினரிடையே வலியுறுத்தினார்.